• Apr 01 2023

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிம்பு வருவாரா?- வித்தியாசமாக இருக்கும்- கௌதம் கார்த்திக் சொன்ன விஷயம்

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ளது. வரும் மார்ச் 18ம் தேதி பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் டீசர் வெளியீட்டு விழாவுக்கு நடிகர் சிம்பு வரவில்லையே ஏன் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இயக்குநர் கிருஷ்ணா, நடிகர் சிம்பு வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பெற்று வரும் நிலையில், அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை எனக் கூறினார்.


ஆனால், வரும் மார்ச் 18ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக சிம்பு கலந்து கொள்வார் என உறுதி அளித்துள்ளனர். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் லைவ் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரபலங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினர்.


இந்த நிலையில் பத்து தல டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கௌதம் கார்த்திக் நம்ம படம் நான் கலந்துக்காம எப்படி என பேசினார். மேலும், இன்னொரு விஷயத்தையும் ரசிகர்களுக்காக உறுதி அளித்துள்ளார்.


மஃப்டி படத்தின் ரீமேக்காக பத்து தல இருந்தாலும், இந்த படத்தின் இயக்குநர் கிருஷ்ணா படத்தை முற்றிலும் வேறு விதமாக அணுகியிருக்கிறார். சிம்புவின் போர்ஷன் கூடுதலாக உள்ளது. கண்டிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் அளவுக்கு இந்த படம் இருக்கும் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement