பிரியங்கா பைனலுக்கு வருவாரா? தற்போதைய உடல்நிலை பற்றி வெளியான தகவல்..!

350

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை யார் வெல்லப்போகிறார் என்பது தெரிந்து விடும்.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.இவ்வாறு இருக்கையில் தற்போது நிரூப் ,பிரியங்கா, அமீர், பாவ்னி, ராஜு என 5பேர் பைனலுக்கு தேர்வாகி உள்ளார்கள்.

இதனில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக இருந்துவரும் பிரியங்கா நேற்று முன்தினம் உடல்நில சரியில்லாத காரணத்தினால் பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியேறினார். அவர் கன்பெக்ஷன் ரூம் வழியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல காட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிரியங்கா உடல்நிலை எவ்வாறு உள்ளது என புது தகவல் வெளியாகி இருக்கிறது. பிரியங்கா மீண்டும் வீட்டுக்குள் வந்துவிட்டார் என்றும் அவர் வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகும் எனவும் செய்தி வந்திருக்கிறது.

இதனால் பிரியங்கா கண்டிப்பாக பைனலில் பங்கேற்பார் என தெரிகின்றது. அவர் நினைத்து இருந்தால் ஷோவில் இருந்து கூட சென்றிருக்கலாம், ஆனால் அவர் இந்த நிலையிலும் தொடர்வது பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: