• Jun 04 2023

ஆரம்பமான போட்டி... பார்த்திக்காக களமிறங்கிய காவியா... ஜீவாவை ஏற்றுக்கொள்வாரா ப்ரியா...? 'ஈரமான ரோஜாவே-2' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியல் ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்து சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


அதில் இந்த வீட்டினுடைய சிறந்த மாப்பிள்ளை யார் என்பதைக் கண்டறியும் நோக்கில் போட்டி ஒன்றினை வைக்கின்றார்கள். அந்தவகையில் பார்த்தியும், ஜீவாவும் விளையாடுகின்றனர். ஆனால் பார்த்தி காயை நகர்த்தி போட்டியில் முன்னேறுகின்றார்.


அதனைப் பார்த்த ப்ரியா ஜீவாக்கு சப்போர்ட் பண்ணி அவரின் கையைப் பிடித்து காயை நகர்த்தி உதவுகின்றார். அதேபோல் காவியாவும் பார்த்தியின் கையைப் பிடித்து விளையாட உதவுகின்றார். இவர்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. போகப்போக ஜீவாவை ப்ரியா ஏற்றுக்கொள்வார் போலவே தெரிகின்றது. இவ்வாறாக  இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement