• Dec 01 2023

LEO 1000 கோடி வசூல் செய்யுமா? எந்த பைத்தியக்காரன் சொன்னது- கொந்தளித்த பிரபலம்

stella / 9 months ago

Advertisement

Listen News!

விக்ரம் படத்தை முடித்துவிட்டு விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த லோகேஷ் கனகராஜ், வாரிசு படம் வெளியானதும் அடுத்த படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பை தொடங்கினார். இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசு தேவ் மேனன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மஞ்சுர் அலி கான்,மிஷ்கின், கேஜிஎஃப் படத்தில் ஆதிரா கேரக்டரில் வில்லத்தனத்தில் மிரட்டிய சஞ்சய் தத் இப்படத்தில் கமிட்டாகி உள்ளார்.

தளபதி 67 என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தற்கு லியோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இருந்து தாறுமாறான டைட்டில் ப்ரோமோ வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தது. இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ந் தேதி திரையரங்கில் வெளியாகும் என படம் குறித்த மொத்த அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டது.


இந்நிலையில், லியோ திரைப்படம் ஆயிரம் கோடியை வசூலிக்கும் என பரவி வரும் தகவலை தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் பேட்டியில் மறுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் 1500 தியேட்டர்களிலும், உலக அளவில் 5 ஆயிரம் தியேட்டர்களில் படம் போட்டால் கூட ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் என்பது எல்லாம் நடக்காத விஷயம்.


மாநரகம், கைதி, விக்ரம் படத்தின் வசூலை விட லியோ படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று சொல்லுவது எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. உலகத்திலேயே சிறந்த பைத்திரக்காரர் வேண்டுமானால் அப்படி சொல்லிக் கொள்ளலாம் ஆனால், என்னால் அப்படி சொல்ல முடியாது என்று திருச்சி ஸ்ரீதர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement