• Apr 24 2024

பாகுபலி, கேஜிஎப் திரைப்படங்களின் சாதனையை முறியடிக்குமா இந்தியன் 2- படத்தின் காட்சிகளைப் பார்த்து அசந்து போன கமல்ஹாசன்

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2. படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து சென்னை, ஐதராபாத், திருப்பதி போன்ற இடங்களிலும் தைவான், ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இறுதிக்கட்ட சூட்டிங்கில் படம் உள்ளது. இந்தப் படத்தையும் ராம்சரணின் கேம்சேஞ்சர் படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கிவந்த ஷங்கர், ராம்சரண் படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் அந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில், இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கும் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கை ஏறக்குறைய நிறைவு செய்துள்ள கமல்ஹாசன், இதுவரை நடந்துள்ள தனது போர்ஷனுக்கான டப்பிங்கையும் நிறைவு செய்துள்ளார். 


இதனிடையே இந்தப் படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த கமல்ஹாசன் மிகவும் உற்சாகமடைந்துள்ளாராம். இந்தப் படத்தின் முன்பு பாகுபலி, கேஜிஎப் படங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை என்று அவர் தன்னுடைய வியப்பை வெளியிட்டுள்ளாராம்.மேலும் இந்தப் படம் இந்திய சினிமாவில் பெஞ்ச் மார்க்காக அமையும் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளாராம். 

இந்தியன் 2 படம் ரிலீசானதும் பாகுபலி, கேஜிஎப் படங்ககள் குறித்தெல்லாம் யாரும் இனிமேல் பேசமாட்டார்கள் என்றும் அந்த அளவிற்கு இந்தியன் 2 மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் தன்னை வேறு லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டுள்ளாராம் உலகநாயகன் கமல்ஹாசன்.


Advertisement

Advertisement

Advertisement