• Mar 29 2024

துணிவு பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்வாரா?- பல்பு வாங்கிய உதயநிதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

 வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு, இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜித் நடித்து வருவதோடு கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் இவர்களுடன் முத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்துடன் வாரிசு திரைப்படமும் வெளியாகவுள்ளது.


இதற்கிடையே துணிவு படத்தின் ப்ரமோஷனுக்காக அஜித்திடம் உதயநிதி பேசியுள்ளாராம். இதற்கு பதில் அளித்த அஜித், தன்னால் வர முடியாது என்று உதயநிதியிடம் பணிவுடன் கூறி விட்டாராம். இந்த தகவலை உதயநிதி சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உதயநிதி பேசியே, அஜித் ப்ரமோஷனுக்கு வர மறுத்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதேபோன்று துணிவு படம் செமையாக வந்திருப்பதாகவும் உதயநிதி அப்டேட் கொடுத்திருக்கிறார்.இப் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.


Advertisement

Advertisement

Advertisement