ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியும் கைது செய்யப்படவுள்ளாரா?- திடீரென வெளிவந்த தகவல்

199

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்தவர் என்பது தெரிந்ததே. மேலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் ராஜ்குந்த்ரா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

அத்தோடு இவரது கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே . அத்தோடு ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்தது நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்து தான் நடந்ததா?, அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் சமீபத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் தற்போதைய தருணத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர் என்பதும் முக்கியமாகும்.

அதாவது ராஜ்குந்த்ராவின் பண பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு செய்ய மும்பை குற்றப்பிரிவு போலீசார் நிதி தணிக்கையாளர்களை நியமித்து உள்ளனர். என்பதும் ஷில்பா ஷெட்டி கைது செய்யப்படுவாரா இல்லையா என்பதும் விசாரணை முடிவின் போது தான் தெரிய வரும் என்று பலரும் கூறுவதையும் காணலாம்.