• Apr 25 2024

'வாரிசு' படத்தில் குஷ்பு நடித்த காட்சிகள் ஏன் இல்லை? முக்கிய பிரபலம் கூறிய தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று முன்தினம் (11.01.2023) வெளியாகி உள்ளது.தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் சூப்பர் ஹிட்டாக  நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.


தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் நாளை ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகுமென  அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நேற்று முன்தினம் வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று  முன்தினம் அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.


இவ்வாறுஇருக்கையில்  தனியார் ஊடகம் ஒன்றிற்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை எடிட்டர் பிரவீன் கே எல் அளித்துள்ளார்.மேலும் அதில், குஷ்பு, ஜான் விஜய் நடித்த காட்சிகள் படத்தில் இல்லாதது குறித்து பதில் அளித்தார்.


எடிட்டர் பிரவீன் கே எல் தெரிவித்ததாவது, "அவங்க எல்லாம் என்ன பாத்தா கொன்றுவாங்கனு‌ நினைக்கிறேன். அவர்களிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எதிர்பாராத விதமாக அந்த காட்சிகள் நீக்க வேண்டியதாயிற்று. மீண்டும் தியேட்டரில் அந்த காட்சிகளை சேர்த்து விடலாம் என்று நம்பிக்கையில் இருக்கிறோம். பார்க்கலாம். வம்சி சார் குஷ்பு மேடத்திடம் இது குறித்து பேசினார். அதற்கு குஷ்புவும் "அது பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்". படத்தின் நீளம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது" என பிரவீன் கே எல் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement