• Mar 25 2023

நான் ஏன் மரணத்தைக்கண்டு பயப்பட்ட வேண்டும்? வலைத்தளங்களில் வைரலாகும் சிவாஜி கணேசனின் பேச்சு

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகில் உள்ள தற்போதைய நடிகர்களுக்கு குருவாக விளங்கி வருபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பதும் அவர் நடிக்காத வேடமில்லை, பெறாத விருதுகள் இல்லை, பார்க்காத வெற்றிகள் இல்லை என்பதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் அவர் ஆங்கில ஊடகத்திற்கு ஆங்கிலத்தில் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் நீங்கள் மரணத்தை கண்டு பயப்படுகிறீர்களா? என்று கேட்டதற்கு 'இல்லை, நான் ஏன் மரணத்தை கண்டு பயப்பட வேண்டும்? நாங்கள் சோழர் பரம்பரை சேர்ந்தவர்கள்’ என்று கம்பீரமாக கூறினார். 

கடந்த சில ஆண்டுகளாக எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான், எனது இதயத்தில் சில பிரச்சனைகள் உள்ளது என்று கூறிய சிவாஜி கணேசன் இது கடுமையான உழைப்பு மற்றும் அதிக சத்தத்துடன் வசனங்கள் பேசியதன் காரணமாக வந்தது, ஆனால் நான் எப்போதுமே மரணத்தை கண்டு பயந்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நான் மூன்று ஷிப்டுகள் வேலை பார்த்தேன் என்றும் அது என்னுடைய விருப்பத்தின் பேரில் தான் வேலை பார்த்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நான் இந்தியன் என்பதில் மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்வேன் என்றும் நான் கனடா மேயராக சில நாட்கள் இருந்த போதிலும் எனக்கு இந்தியன் என்று கூறுவதில் தான் பெருமை என்றும் இந்தியன் என்பதை ஒரு நாளும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement