• Jun 05 2023

நான் ஏன் பயப்பிடனும் சாவை கண்டு கொள்வதே கிடையாது- மீசையை முறுக்கிவிட்டு சிவாஜி கணேசன் கொடுத்த பேட்டி

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் நடிப்பில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்ந்தவர். எந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் அக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார் . வீரபாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடலில் வரும் சிவன், பாரிஸ்டர் ரஜினிகாந்த் போன்ற பல கதாப்பாத்திரங்களை நாம் இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்த நிலையில் சிவாஜி கணேசன் தனது கடைசி காலகட்டத்தில் அளித்த ஒரு ஆங்கில பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் நிருபர், சிவாஜியிடம், “சாவை பார்த்து பயப்படுகிறீர்களா?” என கேட்கிறார். அதற்கு ஆங்கிலத்திலேயே பதிலளித்த சிவாஜி கணேசன், “ஏன் பயப்படனும். நான் சாவை கண்டுகொள்வதே கிடையாது. நான் ஒரு சோழன். நான் எதற்கும் பயப்படமாட்டேன்” என கூறி மீசையை முறுக்குகிறார்.


மேலும் பேசிய அவர், “கடந்த நான்கு அல்லது ஐந்து மாதங்களாக எனது உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. எனக்கு இருதய கோளாறு இருந்தது. கார்டியோமையோபதி என்பார்கள். மிகவும் கத்தி கத்தி வசனம் பேசியதால் வந்த கோளாறு அது. நான் கெட்டவன் கிடையாது. ஆனால் நான் ரிஷியும் அல்ல, அதே நேரத்தில் நான் கெட்டவனும் அல்ல” என முகத்தில் சிரிப்போடு கூறுகிறார். இந்த பேட்டி இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement