• Apr 18 2024

கமல் அசீமை திட்டினால் ஜனனிக்கு ஏன் கோபம் வருது-கண்டுபடித்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமல் ஹாசன் அசீமை திட்டினால் ஜனனிக்கு என்ன பிரச்சனையாம் என பிக் பாஸ் பார்வையாளர்கள்  பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் அசீம் சக போட்டியாளரான ஆயிஷாவை திட்டி போடி என்றார். அத்தோடு டால் ஹவுஸ் வாசலில் நின்ற தனலட்சுமியை பிடித்து தள்ளிவிட்டு போடி என்று கூறினார்.

மேலும் தனலட்சுமி தான் சக போட்டியாளர்களை தள்ளிவிட்டார் என்று கூறி அவரை திட்டினார். தனலட்சுமிக்கு ஆதரவாக வந்து நியாயம் கேட்டவர்களை கத்தினார்.

திருநங்கையான ஷிவின் கணேசனை கிண்டல் செய்தார். எதற்கெடுத்தாலும் கத்தினார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டுமென்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில்  தான் அசீமை கடுமையாக கண்டித்திருக்கிறார் கமல் ஹாசன். உங்கள் மகனுக்காக உங்களை கண்டிக்கிறேன் என்றார்.

அசீமை கமல் டோஸ் விட விட ஷிவினும், தனலட்சுமியும் சிரித்தார்கள். வாங்கு, வாங்கு, நல்லா திட்டு வாங்கு என சிரித்தார்கள்.



அப்படி தனலட்சுமி சிரிக்க அவரை பார்த்து ஜனனி முறைத்தார்.அத்தோடு  அசீமை கமல் திட்டினால் இந்த விஷ பாட்டில் ஜனனிக்கு எதற்கு கோபம் வருகிறது என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தோடு ஜனனி அழகி, அப்பாவி என்று கூறி வந்த பார்வையாளர்கள், தற்போது அவரை விஷ பாட்டில் என்கிறார்கள். இதற்கிடையே பிக் பாஸ் வீட்டில் இருந்து அசல் கோலாரை வெளியேற்றியது தான் பார்வையாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement