விஜய்டிவி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் நபர் யார் தெரியுமா?- வைரலாகும் புகைப்படம்

130298

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன ரசிகர்களிடையே இடம்பிடித்துள்ளன. அத்தோடு இதில் நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கக் கூடிய பல முன்னணி தொகுப்பாளர்களும் இருக்கின்றனர்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் யாவரும் அறிந்ததே.

சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். திவ்யதர்ஷினி தற்போது உலகமுழுவதும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் பாரிஸில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சா சாப்பிட்டுள்ளார். அந்த பீட்சா குறித்தும் அதை சமைத்த செஃப் குறித்தும் புகழ்ந்து தள்ளிய DD. அவரை சந்தித்தது மட்டுமின்றி அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.