• Apr 24 2024

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் திடீரென வைரலாகி விடும்.அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நட்சத்திரம் ஒருவரின் சிறு வயது புகைப்படம்  தற்போது வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ஒரே சமயத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு தற்போது இசையமைத்துள்ளார்.



பிசியாக இருந்து வரும் அனிருத் தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே கொலவெறி என்ற பாடலை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார் அனிருத்.அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே என இவர் இசையமைத்த அனைத்து படங்களின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது

எனினும் இதைத்தொடர்ந்து இவருக்கு விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம் என அடுத்தகட்ட ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் அனிருத் முன்னணி இசையமைப்பாளரானார்.



இந்நிலையில்  இசையமைப்பாளர் அனிருத்தின் சிறு வயதில் எடுக்கப்பட்ட புகை்படம் தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement

Advertisement