• Apr 25 2024

அண்ணாவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கும் பிரபல நடிகை..யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படங்களில் நடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.ரம்மி, பண்ணையாரும் பத்மினியும். காக்கா முட்டை, செக்க சிவந்த வானம், கனா, வானம் கொட்டட்டும், திட்டம் இரண்டு, பூமிகா போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடைத்தைப் பிடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அத்தோடு  இவர் தற்போது 'டிரைவர் ஜமுனா', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் டிரைவர் ஜமுனா ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளது. அதே நேரம், தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் இரண்டு படங்களுமே, ஐஸ்வர்யா ராஜேஷின் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளன.அத்தோடு  முக்கியமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ஏராளமான விருதுகளையும் வாங்கி குவித்தது. இதனால் இந்த இரண்டு படங்களுமே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில், தி கிரேட் இந்தியன் கிச்சன் அடுத்த வாரம் 29ம் தேதியும், டிரைவர் ஜமுனா 30ம் தேதியும் ரிலீஸாகின்றன.

டிரைவர் ஜமுனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் 'ஆடுகளம்' நரேன், கவிதா பாரதி, ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பி.கின்ஸ்லி இயக்கியுள்ளார். அதேபோல், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை ஆர். அத்தோடு கண்ணன் இயக்க, ராகுல் ராஜேஷ் உள்ளிட்ட பலர் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்துள்ளனர். இவ்வாறுஇருக்கையில், ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளதால், அவர் பிக் பாஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டனும் விளையாடி வருகிறார். இதுவரை எவிக்சனில் இருந்து தப்பி பிழைத்துள்ள அவர், டைட்டில் வெல்வதற்கான வாய்ப்பு இல்லையென்றே தெரிகிறது. ஆனால், மணிகண்டன் நாமினேஷனில் இருந்த போது அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், ஆதரவாக ஓட்டும் கேட்டிருந்தார். அதனால், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படங்களின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் செல்லலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement

Advertisement

Advertisement