• Nov 29 2022

இந்தியன்-2 இல் நடிக்கப்போகும் நடிகை யார்..? உண்மையை உடைத்த காஜல்..!

Listen News!
Aishu / 3 months ago
image
Listen News!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்து வந்த படம் இந்தியன் 2. பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் 2019 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இப் படத்தின் 40 சதவீதம் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், கொரோனா லொக்டவுன், வழக்கு போன்ற பல காரணங்களால் ஷுட்டிங் பாதியிலேயே இடை நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது ஷுட்டிங் துவங்கப்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆனால் இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்க்கும் இந்தியன் 2 படம் எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர். அத்தோடு டைரக்டர் ஷங்கர், தற்போது ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை பிஸியாக இயக்கி வருகின்றார்.

இதற்கிடையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்கு தயாராவதற்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளதாகவும், அங்கு இந்தியன் 2 படத்தில் தான் நடிக்கும் வயதான கேரக்டருக்கு பொருந்து வகையிலான மேக்அப் போடுவதற்காக ஹாலிவுட் மேக்அப் மேன்களுடன் ஆலோசனை நடத்த கமல் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது.அத்தோடு 3 வாரங்களுக்கு பின்னர் இந்தியா திரும்பியதும், இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கில் கமல் பங்கேற்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்தியன் 2 படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வந்த காஜல் அகர்வால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் அவருக்கு ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்தது. இதனால் அவர் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்து விட்டதாலும் அவர்களுக்கு பதில் நடிக்க உள்ளவர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

எனினும் இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் டாப் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த சமயத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பேசிய காஜல் அகர்வாலிடம் ரசிகர்கள் சிலர் இந்தியன் 2 படம் பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் இருந்து நான் விலகியதாக யார் சொன்னது? நாங்கள் செப்டம்பர் 13 ம் தேதி இந்தியன் 2 ஷுட்டிங்கை மீண்டும் துவங்க போகிறோம் என அப்டேட் கொடுத்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். இந்தியன் 2 ஷுட்டிங் துவங்கப்பட சந்தோஷம் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் காஜல் அகர்வால் மாற்றப்படவில்லை என்ற சந்தோஷம். காஜல் அகர்வாலுக்கு பதில் யார் நடிக்க போகிறார்கள் என வதந்திகளுக்கும், இந்தியன் 2 ஷுட்டிங் துவங்கப்படுமா அல்லது கைவிடப்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கும் இவரது பதில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் ட்விட்டரில் #KajalAggarwal, #Indian2 ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி உள்ளன. அதிகமான ரசிகர்கள் காஜல் அகர்வாலின் பேட்டியை பகிர்ந்து வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்: