• Feb 04 2023

"நம்பர் 1 யாரு?".. போனி கபூர் கொடுத்த தரமான பதில்

Listen News!
Aishu / 3 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11.01.2023 அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி மக்கள் மத்தியில் விறுவிறுப்பை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரிலீஸ் நாளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.மேலும்  இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிந்துள்ளார்.

துணிவு திரைப்படத்தை போலவே, தமிழ் சினிமாவில் மற்றொரு முன்னணி நடிகரான விஜய்யின் திரைப்படமான "வாரிசு" கூட 11.01.2023 அன்று வெளியாக உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். அத்தோடு இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஜெயசுதா, பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் அஜித் மற்றும் விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், இருவரின் ரசிகர்களும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே போல, ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறு போட்டியும் கூட உருவாகி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறுஇருக்கையில், துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், Behindwoods நேயர்களுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் அஜித் குமார் குறித்தும், இயக்குனர் H. வினோத் குறித்தும், துணிவு திரைப்படம் குறித்தும் என பல சுவாரஸ்ய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

எனினும் அதே போல, துணிவு மற்றும் வாரிசு ரிலீஸ் மத்தியில் இந்த நம்பர் 1 என்ற பேச்சு இருப்பது பற்றி நெறியாளர் கேள்வியை முன் வைக்க இது பற்றி பேசும் போனி கபூர், "எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. Content தான் நம்பர் 1 என நான் நினைக்கிறன். லவ் டுடே எப்படி இவ்வளவு பெரிய ஹிட் ஆனது?. நம்பர் 1 என்பது சிலரின் மனதில் உள்ளது. அதை மனதில் வைக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரையில் Content தான் நம்பர் 1" என பதில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement