• Apr 19 2024

புறம் பேசுற புத்தி இந்த வீட்டில யாருக்கு இருக்கு... போட்டு வாங்கும் கமல்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸஸ்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்களும் சலிப்படையாமல் விளையாடி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் பிக்பாஸ் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக வார இறுதி எபிசோட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டமோ ஏராளம். ஏனெனில் அப்போது தான் கமல் போட்டியாளர்களிடம் பல கேள்விக் கணைகளைத் தொடுத்து ஒவ்வொருவரைப் பற்றியும் போட்டு வாங்குவார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் "இவர் பாராட்டினால் கண்டிப்பாக பின்னாடி போய்ட்டு வேறு ஒண்ணு செல்லுவார்" அப்படியான ஒரு நபரை சுட்டிக் காட்டுமாறு கேட்கின்றார்.

அதற்கு தனலட்சுமி, ஜனனி ஆகியோர் எழுந்து மைனாவைக் கூறுகின்றார்கள். அதற்கு மைனா "எனக்கு புறம் பேசுற புத்தி கண்டிப்பாக இருக்கு' எனக் கூறுகின்றார். மேலும் ராம், அமுதவாணன் ஆகியோர் அசீமைக் கூறுகின்றார்கள். அதேபோல விக்ரமனும் அசீமையே கூறியிருக்கின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement