யாஷிகாவோடு காரில் சென்ற ஆண் நண்பர்கள் யார்- வெளிவராத தகவல்

775

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பரானவை. இந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். அத்தோடு இந் நிகழ்ச்சியானது இது வரைக்கும் 4 சீசன்களைக் கடந்துள்ளது.

மேலும் அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இவர் இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும். மேலும் அவ்வப்போது விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகின்றார்.

மேலும் இவர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் யாஷிகா சுய நினைவுக்கு வந்த பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து நடந்த அந்த காரில் இவர்கள் இருவரைத் தவிர இரண்டு ஆண்கள் இருந்ததாகவும், அவர்கள் யார் என்பது வெளியே வரவே இல்லை என்றும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படவே இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன என்பதும் முக்கியமாகும்.