• Mar 25 2023

நீங்க நடித்ததில் பூமர் படம் எது? ஜெயம் ரவியின் நக்கலான பதில்

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயம் ரவி, ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து இன்றுவரை பல படங்களில் நடித்து வருகின்றார். அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் உலகம் பூராக உள்ள ரசிகர்களையுமே திரும்பிப்பார்க்க வைத்தார். 


இதனையடுத்து பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றார். அந்தவகையில் சமீபத்திலும் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது இதில் நீங்கள் நடித்த படத்திலேயே "பூமர் படம் என்றால் அது எது" என்ற கேள்வியைக் கேட்டிருந்தார்கள். அதற்கு  ஜெயம்ரவி "எல்லாப்படமுமே பூமர்' தான் என சிரிச்சுக்கிட்டே கூறியிருக்கின்றார். அடுத்ததாக நீங்க நடிச்சதிலேயே ஓவர் என்டடைனிங் படம் எது என்ற கேள்விக்கு 'ரோமியோ யூலியட் எனப் பதிலளிக்கின்றார் ஜெயம்ரவி.


இதனையடுத்து ஹீரோயின்ஸ் பற்றிக் கேட்கின்றார்கள். அதில் த்ரிஷா என்றால் ப்ரென்ட்ஷிப் என்றும், டென் என்றும் கூறுகின்றார். அதேபோல் பிரியாபவானி சங்கர் மற்றும் நயன்தாராவையும் டென் என்றே கூறுகின்றார். அதேபோல் பிரியாபவானி சங்கரை 30 எனவும் கூறுகின்றார். 


இறுதியாக 'போராடி ஜெயிக்கணும் இல்லேன்னால் போராடித் தோக்கணும்" எனவும் ஒரு தத்துவக் கருத்தைக் கூறி இருக்கின்றார் நடிகர் ஜெயம் ரவி.

Advertisement

Advertisement

Advertisement