• Mar 28 2023

பணம் கொடுத்த போது வாங்கவில்லை கோபப்பட்டாங்க- மறைந்த விஜே சித்ரா பற்றி இதுவரை தெரியாத ரகசியம்- நெகிழ்ந்த பிரபலம்

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின்  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக நட்சத்திரமாக வலம் வந்தவர், வி‌ஜே சித்ரா.கடந்த 2013 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா,பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரமாக மக்களிடையே பிரபலமடைந்தார். ஆனால் கடந்த 2020 டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

  அவருடைய மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இவரது மரணம் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல சின்னத்திரை பிரபலங்கள் இடையேயும் கடும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் அப்போது உருவாக்கியது.


 இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை இசையமைப்பாளர் ஶ்ரீ காந்த் தேவா அளித்துள்ளார். அதில் தன்னுடைய குண்டன் ஆல்பம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்த குண்டன் ஆல்பம் தான் சித்ரா நடிப்பில் கடைசியாக வெளியாகியது.  இந்த பாடலை உருவாக்க முனைப்பு காட்டியது சித்ரா தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிஸியாக நடித்து வரும் போதே சித்ரா இந்த ஆல்பத்தில் நடித்தார். ஒரு நாள் கால்சீட்டில் எடுக்க நினேத்தோம்.


இரண்டாம் நாள் படப்பிடிப்பு முடிந்ததும்  பணத்தை  கொடுத்த போது கோபப்பட்டு விட்டார். இந்த ஆல்பத்தில் நடிக்க சித்ரா பணம் எதுவும் வாங்கவில்லை. இந்த ஆல்பத்தை வெளியிட மனம் வரவில்லை. இருந்தாலும் சித்ராவின் ஆசியோடு இப்போது வெளியாகிறது.  இந்த ஆல்பத்தை சித்ராவின் ரசிகர்கள், அவரின் பெற்றோருக்கு டெடிகேட் செய்கிறோம்." என ஶ்ரீ காந்த் தேவா பேசினார்.


Advertisement

Advertisement

Advertisement