• Dec 07 2022

வீடு திரும்பிய கமல்... ஓய்வெடுக்க சொன்ன டாக்டர்கள்.. அப்போ இனி பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க மாட்டாரா..?

Listen News!
Prema / 1 week ago
image
Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும், உலகநாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன். மக்கள் மனம் கவர்ந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


அதாவது ஐதராபாத் சென்று வீடு திரும்பிய அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமையை அறிந்த ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

அதிலும் குறிப்பாக அவருக்கு என்ன ஆகி இருக்கும் என்று பதறிப்போய் இருந்தனர். இந்நிலையில் தற்போது குட் நியூஸ் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளதாக கூறப்படுகின்றது. 


மேலும் அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததன் காரணமாகத் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பி உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்லாது ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்க கமலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்களாம். 

இதனால் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்த பின்னர், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்று வருவதால் அதிலும் கூடிய சீக்கிரம் இணைந்து கொள்வாராம்.


மேலும் கமல்ஹாசன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்களையும் தொகுத்து வழங்கி உள்ளார். அதுமட்டுமல்லாது இதற்கு முன் நடந்து முடிந்த 5 சீசன்களில் ஒரே ஒரு வாரம் தான் அவர் முழுமையாகத் தொகுத்து வழங்காமல் போனது. 

ஏனெனில் 5-ஆவது சீசனின் போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அப்போது ஒரு வாரம் மட்டும் அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த சீசனையும் வேறு யாரவது தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் அவர் உடல்நலம் தெரியவுடன் அவரே தொகுத்து வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.