• Mar 23 2023

ராஷ்மிகாவை காதலிக்கிறாரா பிரபல கிரிக்கெட் வீரர்..? தீயாய் பரவும் தகவல்.. பின்னணி என்ன..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் நடிகைகள் பலரும் தொலதிபர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் டேட்டிங் செய்வது சகஜமான ஒன்று. அந்தவரிசையில் தற்போது இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தென்னிந்திய நடிகை ஒருவர் மீது கிரஷ் கொண்டுள்ளார் என்ற தகவல் ஆனது தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகின்றது.


அந்தவகையில் ஏற்கனவே சுப்மன் கில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுடன் காதல் கொண்டுள்ளார் என வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது மற்றோர் நடிகை மேல் கிரஷ் கொண்டுள்ளாராம்.


அதாவது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம் உங்கள் அபிமான நடிகை யார் என கேட்டதற்கு முதலில் சத்தமாக சிரித்த கிரிக்கெட் வீரர் பின்னர் ராஷ்மிகா மந்தனா என பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்லாது அவர் மீது கிரஷ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு ராஷ்மிகா மீது காதல் என  சுப்மன் கில் வெளிப்படையாக கூறியதற்கு ராஷ்மிகா என்ன பதிலளிக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கும் இந்த நேரத்தில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுப்மன் கில் தான் எந்த ஊடகத்திற்கு இப்படி பேட்டி கொடுத்தேன் என்று தனக்கு தெரியவில்லை எனக் கூறியுள்ளாராம். 

Advertisement

Advertisement

Advertisement