• Mar 29 2023

ஜெயிலர் அம்மாவிடம் சிக்கிய சித்ரா- இனி நடக்கப் போவது என்ன- அதிரடித் திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா 2'

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாரதி கண்ணம்மா 2'. இந்த சீரியலில் பரபரப்பான சம்பவங்களும், அதிரடித் திருப்பங்களும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. 


இந்நிலையில் இந்தவாரத்திற்கான ப்ரோமோவில் பள்ளியில் நடக்கும் விழா ஒன்றிற்கு சீப் கெஸ்ட் ஆக ஜெயிலர் அம்மா வந்து இறங்குகிறார். இதைப் பார்த்த கண்ணம்மா உடனே அதிர்ச்சி அடைகிறாள். அவர்கள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என அந்த இடத்தை விட்டு நகர முயல்கின்றார்.

பிறகு சீப் கெஸ்ட்டுக்கு கொடுக்க வேண்டிய கிப்ட் உடைந்து போனதால் சண்முகம் வாத்தியார் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க கண்ணம்மா இதே போல நான் செய்து தருகிறேன் என சொல்லி அதற்கான பொருட்களை வாங்கி செய்து கொடுக்கிறார். 


அந்த கிப்டை வாங்கிப் பார்த்த ஜெயிலர் அம்மா "இந்தக் கிப்டை பார்க்கும் போது நம்ம ஜெயிலில் சொல்லிக் கொடுப்பது போலவே இருக்கிறது" என மனதிற்குள் எண்ணுகின்றார். பின்னர் இந்த கிப்டை பண்ணினவங்களை நான் பாக்கணும் கொஞ்சம் கூப்பிடுங்கள் எனக் கூறுகின்றார்.

பின்பு வாத்தியார் வந்து சப் ஜெயிலர் அம்மா உன்னை பார்க்கணும் என்று கூப்பிடுறாங்க வாம்மா போகலாம் என்று அழைத்து செல்கின்றார். கண்ணம்மாவும் என்ன செய்வதென்று தெரியாமல் திரு திரு என்று முழித்தவாறே அவருடன் செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement