• Sep 27 2023

கதறி அழும் விக்ரம்... கல்யாணம் பண்ண முடிவெடுத்த வேதா... தன்வியை பிரிக்க ஆதி எடுத்த அதிரடி முடிவு... இனி நிகழப்போவது என்ன..?

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'மோதலும் காதலும்'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் இருக்கிறது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் விக்ரம் வேதாவிடம் "எதுக்கு அந்தப் பத்திரத்தைக் கிழித்தாய்" எனக் கேட்டு அழுகின்றார். பதிலுக்கு வேதா "நீங்க அதில கையெழுத்துப் போட்டிருந்தாலும் தன்வி உங்களுக்கு கிடைச்சிருக்க மாட்டா, உங்களை அழிக்கிறது மட்டுமல்லாமல் தன்வியை உங்க கிட்ட இருந்து நிரந்தரமாக பிரிக்கிறதற்காக ஆதி போட்ட திட்டம் தான் அது" எனக் கூறுகின்றார்.


இதைக் கேட்டதும் "இனிமேல் என் பொண்ணு எனக்கு கிடைக்கவே மாட்டாளா, தன்வியை அவன் கிட்ட இருந்து எப்படி மீட்கிறது" எனக் கேட்டு கதறி அழுகின்றார். அதற்கு வேதா "இதற்கு ஒரே வழி தான் இருக்கு, தன்வி உங்களுக்கு கிடைக்கணும் என்றால் நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்கின்றார். வேதாவின் முடிவைக் கேட்டதும் விக்ரம் அதிர்ச்சி அடைகின்றார். 


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 

  

Advertisement

Advertisement

Advertisement