• May 29 2023

கண்ணீர் விட்டு அழுத சீதா... மதுவை அதிரடியாக கைது செய்த ராஜசேகர்... சவால் விட்ட மகாலட்சுமி... 'சீதா ராமன்' அடுத்து நடக்கப் போவது என்ன..?

Prema / 1 week ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'சீதா ராமன்'. இந்த சீரியலானது நகைச்சுவை, அழுகை, சிரிப்பு என்பவற்றுக்குப் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சீதாவைத் தோற்கடிக்க மகாலட்சுமி பிளான் போடுகின்றார். உடனே சீதா தந்தைக்கு கால் பண்ணி "என்னையும் ராமையும் பிரிச்சிட்டு மதுவை ராமிற்கு கல்யாணம் பண்ணுறாங்க அப்பா, மது சென்னைக்கு வரக் கூடாது" எனக் கூறி அழுகின்றார்.


இதனையடுத்து உடனே ராஜசேகர் மதுவை சென்னைக்குப் போகாமல் தடுக்கின்றார். அதாவது மதுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இவளை எக்காரணத்தைக் கொண்டும் வெளிய விடாதீங்க என கான்ஸ்டபிளிடம் கூறுகின்றார்.


மறுபுறம் மகாலட்சுமி "நான் DSP கிட்ட பேசிட்டேன் எப்பிடியாவது மதுவை சென்னைக்கு அனுப்பி வைப்பாங்க" எனக் கூறுகின்றார். அதுமட்டுமல்லாது "மதுமிதா இங்க வருவா, ராம் மனசில இடம்பிடிப்பா, உன் அப்பனால கூடத் தடுக்க முடியாது" எனக் கூறி சீதாவிடம் சவால் விடுகின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement