• Apr 23 2024

விஜய்யுடன் நடிக்க ஆசைப்பட்ட பிரபல நடிகர்... முடியாது என மறுத்த தளபதி... காரணம் என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் விஜய். என்னதான் இவரது படங்களின் விமர்சனங்கள் எதிர்மறையானவையாக இருந்தாலும் படம் மட்டும் அதிகளவில் வசூல் வேட்டை நடாத்தும். அதற்கு முக்கிய காரணம் அவரின் ரசிகர்கள் தான்.

இந்நிலையில் விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ஆனது அடுத்தாண்டு பொங்கலுக்கு அமோகமாக திரையில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் உடைய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


குறிப்பாக விஜய்யுடன் இணைந்து நடிக்க பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆசைப்பட்டு வருகின்றார்கள். அந்த லிஸ்டலில் பிரபல நடிகரான ஜெய்யும் தற்போது இணைந்துள்ளார். மேலும் விஜய்யின் 'பகவதி' படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் ஜெய் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அறிமுகப்படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியமையால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜெய் சமீபத்தில் விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுவதாக தன் விருப்பத்தை சொல்லியிருக்கின்றார். 


இது தொடர்பாக அவர் கூறுகையில் "நான் பகவதி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்க ஆசையாக இருந்தேன். அந்த ஆசையை விஜய்யிடமும் நேரடியாக நான் கூறியுள்ளேன். அதற்கு விஜய் மறுத்துவிட்டார். ஏனெனில் நீ தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறாய். எனவே ஹீரோவாகவே இரு, சிறிய ரோல்களில் நடிக்காதே என விஜய் கூறினார்" என்று ஜெய் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement