• Feb 01 2023

மறுபடியும் விஜய் செய்யும் விஷயம்! வாரிசு பற்றி எதிர்பார்க்காத ஒரு அப்டேட்

Listen News!
Aishu / 3 weeks ago
image

Advertisement

Listen News!

விஜய்யின் வாரிசு படம் சென்சார் முடிந்து தற்போது ஜனவரி 11ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

அதே நாளில் தான் துணிவு படமும் ரிலீஸ் ஆகிறது என்பதால் பாக்ஸ் ஆபிசில் ஓப்பனிங் வசூலில் முதலிடம் பெறப்போவது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.  

அத்தோடு  தியேட்டர் பகிர்வு தொடர்பாகவும் பல விவகாரங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. மேலும் அதில் விஜய் பேசிய விஷயங்கள் மற்றும் குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரல் ஆனது.


இவ்வாறுஇருக்கையில்  தற்போது விஜய் மீண்டும் ஒரு வாரிசு விழாவில் கலந்துகொள்ள போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

நாளை ஹைதராபாத்தில் தெலுங்கு ரசிகர்களுக்காக ஒரு விழாவை தில் ராஜு நடத்தப்போகிறார் என்றும் அதில் விஜய் கலந்துகொள்ள போகிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது.

அதனால் விஜய்யின் இன்னொரு குட்டி கதையை கேட்க ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்து உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement