• Apr 25 2024

"இத்தனை போராட்டத்துக்கப்புறம்".. அண்ணன் விக்ரமன் பற்றி தங்கை கூறிய விசயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் நடந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.அதாவது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு மூன்று போட்டியாளர்கள் முன்னேறி இருந்தனர். அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேற மற்ற 18 போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் ஃபினாலேவும் நடந்து முடிந்தது.

மேலும் இதில் மூன்றாவது இடத்தை ஷிவின் பிடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் அசிம் ஆகியோரில் ஒருவர் வெற்றி பெற போவதாக கமல் அறிவித்திருந்தார். அதன்படி அசிம் கையை உயர்த்தி அவரை டைட்டில் வின்னராகவும் கமல் அறிவித்திருந்தார். எனினும் இதனை அறிந்ததும் அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கைத்தட்டி தங்களின் பாராட்டுக்களையும் கூறியிருந்தார்.

விக்ரம் இரண்டாவது இடம் பிடித்திருந்த நிலையில், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் மேடையில் வந்திருந்தனர்.


அந்த சமயத்தில் விக்ரமன் குறித்து பேசிய அவரது சகோதரி தமிழரசி, "106 நாள் இந்த வீட்டுக்குள்ள, இத்தனை பிரச்சனைகள், இத்தனை போராட்டத்துக்கு அப்புறம் இந்த வீட்டுக்குள்ள தன்னிலை மாறாமல், பொதுவெளியில் மக்கள் முன்னாடி நம்ம எப்படி எது பேசினாலும் ஒரு பொறுப்பு இருக்கு. அந்த பொறுப்பை மனசுல வச்சுக்கிட்டு அந்த விழிப்புணர்வோட, அதே நேரத்துல தன்னிலை மாறாமல் சுயமரியாதை இழக்காமல், தன்னோட கொள்கைகளில் இருந்து ஒரு படிகூட விலகாமல், ஒரு முன்னுதாரணமா இருந்துருக்காரு. எப்பவுமே எங்க அண்ணன் எனக்காக ஒரு ஸ்டாண்டார்ட் செட் பண்ணுவாரு. இப்போ ஒரு பெரிய ஸ்டாண்டர்ட் வச்சிருக்காரு. ஒரு தங்கைன்னு சொல்றதுக்கு எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு" என தெரிவித்தார்.


முன்னதாக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தனது சகோதரி குறித்து பேசி இருந்த விக்ரமன், அவர் மிகவும் புத்திசாலித்தனமானவர் என்றும் பொலிட்டிக்கல் பலம் வாய்ந்தவர் என்றும் குறிப்பிட்டவர், அவருடன் நிறைய விஷயங்களை விவாதிதுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதனைத்  தொடர்ந்து பேசி இருந்த விக்ரமன், அவரை நினைத்து பெருமைப்படுவதாகவும் தான் வியந்து பார்க்கக்கூடிய பெண்களில் அவர் முதலிடத்தில் இருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் அப்படி இருக்கையில் விக்ரமன் கூறியது போலவே அவரது சகோதரி தமிழரசியின் பேச்சும் அமைந்திருந்தது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது..

Advertisement

Advertisement

Advertisement