• Apr 01 2023

என்ன தலைவா இப்படி கலக்குறீங்களே!!...ஜெலண்ட் சரவணாவின் செம மாஸ் போட்டோஷூட்!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானதற்கு பிறகு தற்போது ஓடிடியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. 

இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இதனிடையே லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது கோர்ட் -ஷூட்டில் செம கெத்தா போஸ் கொடுத்து போட்டோஸ் வெளியிட்டு இருக்கிறார்.இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement