• Mar 29 2024

கௌதம் கார்த்திக்கிற்காக சிம்பு செய்த விஷயம்- இதனால் தான் உங்களை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக அப்பா டி. ராஜேந்தர் இயக்கி நடித்த பல படங்களில் நடித்து வளர்ந்த சிம்புவின் உடம்பு முழுக்கவே சினிமா ரத்தம் ஊறி இருக்கிறது. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார்.

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளவர் சிம்பு.40 வயதாகும் நடிகர் சிம்பு இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கின்றார். இதனால் நேற்றிலிருந்து சிம்பு குறித்து புதிய விடயம் ஒன்று வைரலாகியது.


அதாவது சிம்புவுக்கு இலங்கைப் பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல் வெளியானது.ஆனால் அது உண்மை இல்லை என்றும் சிம்பு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க சிம்பு நடித்து வரும் திரைப்படம் தான் பத்து தல இப்படத்தில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடித்து வருகின்றார்.இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.


மேலும் இப்படத்தின் ப்ரோமோ சாங் அண்மையில் படமாக்கப்பட்டது. ஆனால் இதில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. அவர் உடம்பு குறைப்பதற்காக வெளிநாட்டிற்குச் சென்றிருக்கின்றார்.இதனால் தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து சிம்புவின் அம்மா புதிய தகவலைக் கூறியிருக்கின்றார்.


அதாவது பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக்கு ப்ரோமோ சாங் வைக்க சொன்னதே சிம்பு தானாம்.இந்த ப்ரோமோ சாங் கௌதமுக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் சிம்பு இதில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.சிம்புவின் இந்த மனசிற்காக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement