• Apr 01 2023

குக்வித் கோமாளியிலிருந்து குரேஷி வெளியேற காரணம் இவர் தானா..? பின்னணி என்ன..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

குக்வித் கோமாளி சீசன் 4ஐ விட்டு குரேஷி விலகப் போவதாகவும், அதற்கு முக்கியமான காரணம் வெங்கடேஷ் பட் தான் எனவும் ஏராளமான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் தான் இருக்கின்றன. இவை யாவற்றுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் குரேஷி சில விஷயங்களை கூறியுள்ளார்.


குக்வித் கோமாளி சீசன் 4இல் இதுவரைக்கும் 2எலிமினேஷன் மட்டும் தான் நடந்திருக்கு. மேலும் சர்ச்சையை கிளப்பும் வகையில் மணிமேகலையும் இந்நிகழ்ச்சியிலிருந்து விலகி இருக்கின்றார். இவர் ஏன் வெளியேறினார் என்பது யாருக்கும் சரியான விஷயம் தெரியவில்லை.

இதனையடுத்து குரேஷியும் விலகப் போகிறார் என்ற விடயம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை எனக் கூறப்படுகின்றது. அதாவது குரேஷின் பெயரில் டுவிட்டரில் அக்கவுண்ட் ஒன்று ஓபன் பண்ணி அதன் மூலமாகவே விலகுவதாக சூசகமாக அறிவித்திருந்தனர்.


இதனைப் பார்த்த அதிகளவானோர் குரேஷி விலகப் போகிறார் என முடிவே பண்ணி விட்டார்கள். பின்னர் இந்த டுவிட் டெலிட் செய்யப்பட்டு "உடல் மண்ணுக்கு உயிர் குக்வித் கோமாளி' க்கு என ஒரு பதிவு இடப்பட்டிருந்தது. 


ஆனால் இவை யாவும் இடம்பெற்று ஒரு சில மணி நேரம் கழித்து தான் அது குரேஷியின் அக்கவுண்ட் இல்லை என்பது ரசிகர்களுக்கு தெரிய வந்தது. அவரிடம் டுவிட்டர் இல்லை எனவும் இன்ஸ்டாகிராம் மட்டுமே அவர் பாவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. 

மேலும் இது தொடர்பாக குரேஷி தற்போது கூறுகையில் "விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்களில் என் பங்களிப்பை கொடுத்தாலும் என்னை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது குக்வித் கோமாளி தான். அப்படிப்பட்ட நிகழ்ச்சியை விட்டு நான் போக மாட்டேன்" என்றார்.


மேலும் "எனக்கும் பட் சாருக்கும் மனஸ்தாபம் வந்து விட்டது, சூட்டிங் ஸ்பாட்டில் என்னை அடிக்கிறான் என்ற பெயரில் ஓவராக பேர்போமன்ஸ் பண்ணிட்டு இருக்காரு. இதனால் தான் நான் cwc விட்டுப் போவதாகவும் நிறைய பேர் கூறி இருந்தார்கள், அவை எல்லாமே வதந்தி தான்" எனவும் கூறியுள்ளார் குரேஷி.

Advertisement

Advertisement

Advertisement