• Apr 20 2024

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் பெயர்... என்ன ரொம்ப வித்தியாசமாய் இருக்கே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் சினிமாவில் காமெடி நாயகனாக தனது பயணத்தை தொடங்கி தற்போது கதாநாயகனாக வளர்ந்து நிற்கின்றார். 


இந்நிலையில் இவரின் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகின்றது. அதாவது தமிழ் பட உலகில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ள வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு `சிங்கப்பூர் சலூன்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. 

இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி தான் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நாயகனாக நடித்து பலத்த வரவேற்பை பெற்றிருக்கின்றார். அதாவது 'எல்.கே.ஜி. மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க' ஆகிய மூன்று படங்களிலும் நடித்திருக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து தற்போது இவர் நடிக்க உள்ள இந்தப் படமும் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது `சிங்கப்பூர் சலூன்' என்ற இப்படத்தை கோகுல் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே `ரவுத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா' போன்ற வர்த்தக ரீதியிலான பல படங்களை இயக்கி பிரபலமானவர்.


மேலும் 'சிங்கப்பூர் சலூன்' என்ற இந்தப் படத்தில் பாலாஜியுடன் இணைந்து பல முக்கிய நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். அதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக இருக்கின்றது. அத்தோடு இப்படத்தை அடுத்த வருடம் கோடையில் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement