• Sep 13 2024

கல்யாணத்திற்கு சம்மதித்த விக்ரம்... இனி வேதா எடுக்கப் போகும் முடிவு என்ன..? எதிர்பாராத திருப்பங்களுடன் 'Modhalum Kaadhalum' serial promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'மோதலும் காதலும்'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் இருக்கிறது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் விக்ரமின் தந்தை "வேதா தன்விக்காக தன் வாழ்க்கையையே தியாகம் பண்ணிட்டு வந்திருக்காள்ல, அவளுக்காக நீ என்ன பண்ணப் போறாய்" என விக்ரமிடம் கேட்கின்றார். 

மறுபுறம் வேதாவின் தந்தை "விக்ரம் மறுபடி திரும்ப மாறணும் என்றால் அவனுக்கு தன்வி கிடைக்கணும், தன்வி கிடைக்கணும் என்றால் நீ அவன் கூட இருக்கணும்" என வேதாவிடம் கூறுகின்றார்.


அதேபோன்று விக்ரமின் தந்தை "தன்வி மனசிற்கு எவ்வளவு தூரம் ஒரு அம்மா தேவைப்படுதோ, அதே அளவிற்கு உன் மனசிற்கும் ஒரு துணை தேவைப்படுது, இது எல்லாத்துக்கும் சரியான ஒரு ஆளு வேதா தான் என்கிறார். மேலும் வேதாவின் தந்தை யோசிச்சு ஒரு நல்ல முடிவு கூறு என வேதாவிடம் கூறுகின்றார்.


பின்னர் விக்ரம் கல்யாணத்திற்கு சம்மதிக்கின்றார். இதனைக் கேட்டு வேதா அதிர்ச்சி அடைகின்றார். இனி வேதா எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement