• Apr 24 2024

திருமணமாகாத பிரபல நடிகையுடன்.. நெருக்கமான உறவில் விஜய்.. தீயாய் பரவும் தகவல்.. பின்னணி என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவிருக்கும் இப்படத்தை தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

விஜய் பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்குவது இல்லை. ஆனால் சமீபத்தில் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி தகவல் ஒன்று வெளியானது. இந்த தகவல் திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


அதாவது சங்கீதாவிற்கும் விஜய்க்கும் விவாகரத்து ஆகிவிட்டதாகவும், சங்கீதா தற்போது தனது தந்தை வீட்டில் இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது. ஆனால் அது வதந்தி என பின்பு தகவல் வெளியானது.


இவ்வாறான விஜய் சில ஆண்டுகளுக்கு முன் கில்லி படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் திரிஷாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அந்தவகையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த திரிஷா, விஜய்யுடன் நெருக்கமான உறவில் இருந்தாராம். இதனால் தான் விஜய்யுடன் தொடர்ந்து சில படங்களிலும் பயணித்ததாக கூறப்படுகிறது.


ஆனால், இதன்பின் பல சர்ச்சைக் கருத்துக்கள் வெளியான நிலையில் "எங்களுக்குள் எந்த ஒரு தவறான உறவும் இல்லை, நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம்" என்று திரிஷா கூறியதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் விஜய் தற்போது பல ஆண்டுகளுக்கு பின் திரிஷாவுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement