• Mar 28 2023

உண்மை தெரியாமல் கோபப்பட்ட கோதை- வீட்டை விட்டு வெளியேறிய தமிழ்- நடக்கப் போவது என்ன?

stella / 1 month ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பகல் நேரத்தில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.

இந்த சீரியலில் தமிழ் ராகினியின் கணவரை கொலை செய்ய மிரட்டுவதாகவும் தமிழ் கம்பனியின் முதலாளியாக ஆக திட்டமிட்டு பழி வாங்குவதாகவும் வீட்டில் இருப்பவர்கள் நினைத்து வருகின்றனர்.


இப்படியான நிலையில் ராகினியின் கணவரை யாரோ கத்தியால் குத்திவிட்டு தமிழ் மீது பழி போட்டதாக முதலில் ப்ரோமோ வெளியாகியிருந்தது. இதனை அடுத்து தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் தமிழை தனது பிள்ளை இல்லை என்றும் தமிழைத் திட்டித் தீர்த்து விடுகின்றார் அவரின் அம்மா கோதை. இதனால் கோபமடைந்த தமிழ் நல்லவன் நல்லவன் என்று பாம்புக்கு பாலை ஊற்றி வளர்க்கிறீங்க என்று கூறி சரஸ்வதியையும் கூட்டிக்கொண்டு வெளியே சென்று விடுகின்றார். இதனால் ராகினியின் கணவரின் கெட்ட குணம் பற்றி வீட்டுக்குத் தெரிய வருமா? தமிழ் மீண்டும் தனது வீட்டுக்கு வருவாரா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement