• Apr 25 2024

பிக்பாஸ் வீட்டுக்குள் என்னையா நடக்குது..? திடீரென வைரலாகும் மைனா நந்தினி-விக்ரமன் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

அத்தோடு  கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் , ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது. 

 இதில் "Nominated" என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒன்று இருக்க, அதனை தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர் முகத்தில் நாமினேட் செய்து ஒட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என தெரிகிறது. இதில், ஷிவின், மைனா நந்தினி, விக்ரமன் உள்ளிட்டோர் அசிமை நாமினேட் செய்து அவர் முகத்தில் நாமினேட்டட் என்ற ஸ்டிக்கரை ஒட்டினர். இந்நிலையில், விக்ரமன் தான் கதிரவனை நாமினேட் செய்வதாக கூறியுள்ளார்.

அத்தோடு இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே வீட்டுக்குள் விக்ரமன் மற்றும் மைனாவுக்கு நடனம் கற்றுக்கொடுக்கிறார் அமுதவாணன். விக்ரமன் மற்றும் மைனா இருவரும் கைகள் கோர்த்தபடி நடந்தபடியே  நடன அசைவுகளை வெளிப்படுத்த, அதில் கரெக்ஷன் சொல்கிறார் அமுதவாணன்.


அப்போது, அமுதவாணன் பேசிக்கொடுக்கும்போது "ஒருநிமிஷம் நில்லு அமுது" என்கிறார் விக்ரமன். உடனே "ஒரு குருநாதரை பார்த்து" என அமுது சொல்ல, "யோவ் வாய்யா" என சிரித்தபடியே சொல்கிறார் மைனா. அதன் பின்னர் மூவ்மெண்ட்டில் பிழையை திருத்த அமுதவாணன் முயல, அப்போது மைனாவின் எந்த கையை விக்ரமன் பிடித்திருந்தார் என்பதை மறந்துவிட்டார்.


இதனால் மூவரும் சிரிக்க, அதன் பின்னர் அமுது சொல்லியபடி விக்ரமனும் மைனாவும் நடனமாடுகின்றனர்.மேலும்  ஒவ்வொரு அசைவுகளையும் வாட்ச் செய்த அமுதவாணன் இறுதியில் இருவரையும் பாராட்டுகிறார். அதைக்கேட்டு இருவரும் புன்னகைக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement