• Mar 25 2023

பிரபல கம்பெனி ஒன்றால் ஏமாந்த நடிகர் சரவணன்...என்னதான் நடந்திருக்கும்...?

ammu / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சரவணன் ஒரு பேட்டியின் போது ஆன்லைனால நானும் பாதிக்கப்பட்டிருக்கேன் என்று கூறினார். அவர் கூறுகையில், கொரோனா நேரத்தில் நான் ரொம்ப நேரம் வீட்டில் தான் இருந்தேன், முடிக்காத படங்களுக்கு மட்டும் போயிடு போயிடு வருவேன்.


அந்த நேரத்தில் சேலத்தில் தான் இருந்தேன். அங்கு எனக்கு ஒரு தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தில் ஏதாவது செய்யணும் என்று ஜோசிச்சுக்கொண்டே இருந்தேன். அந்த நேரத்தில் பேப்பரில் ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் 400 சதுர அடி நிலம் தந்தால் டெலிபோன் டவர் கட்டுவதற்கு என்று இருந்தது.


நானும் சரி என்னிடம் இவ்வளவு தோட்டம் இருக்கே 400 சதுர அடி தானே கொடுக்கலாம் என்று நினைத்தேன். அவர்களுடன் பேசினேன், அவர்கள் பாம்பே கம்பனி என்றார்கள். 30 லட்ஷம் பணம் அட்வான்ஸ் தருவதாகவும், 35 ஆயிரம் மாதம் வாடகை தருவதாகவும் கூறினார்கள்.


நானும் என்னுடைய கடனெல்லாம் முடித்து விடலாம் என்று நினைத்து அந்த இடத்தை அவர்களுக்கு காட்டுவதற்காக போனேன். அப்ளிகேஷன் போர்ம் ஒன்று தந்தார்கள் அதில் 25 ஆயிரம் என்னை தரச்சொல்லி கேட்டார்கள். எனக்கு சந்தேகமாக இருந்தது.


பிறகு அவர்களுடைய இடம், போன் நம்பர் ட்ரேஸ் பண்ணி பார்த்தால், அது fake என்று தெரியவந்தது. இப்படி அவர்களால் நான் ஏமாந்துவிட்டேன் என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement