பெயரை மாற்றிய சமந்தா காரணம் என்னவாக இருக்கும் !!

410

தமிழ் திரையுலகில் முன்ணனி நடிகைகள் வரிசையில் இருப்பவர்நடிகை சமந்தா . இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். 2017 ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணமானது .

தனக்கு நாக சைதன்யாவுடன் திருமணம் முடிந்த பிறகு மாமனார் வீட்டு குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை தனது பெயருடன் சேர்த்து சமூக வலைத்தளங்களில் சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார்.

தற்போது ‘எஸ்’ என்ற ஒரே ஒரு ஆங்கில எழுத்தில் அந்தப் பெயரை மாற்றியுள்ளார். டுவிட்டர் தளத்தில் மட்டும் தான் சமந்தா இப்படி பெயரை மாற்றியுள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் மாற்றவில்லை.

அதே சமயம், இன்ஸ்டாகிராமில் ‘எஸ் பிலீவ்’ என்று தனது பெயருக்குக் கீழே குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதற்கான காரணம் விரைவில் தெரிய வரலாம்.சமந்தா தற்போது தெலுங்கில் ‘சாகுந்தலம்’ என்ற படத்திலும், தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார்.