• Apr 19 2024

தனுஷைப் பொல்லாதவனாக பார்க்க ஆசைப்படும் பிரபல நடிகை... என்ன கொடுமைடா இது..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பார்ப்பதற்கு சுள்ளான் போன்று இருந்தாலும் நடிப்பில் பட்டையைக் கிளப்பி வருபவர் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தற்போது மனைவி ஐஸ்வர்யாவுடன் இடம்பெற்ற கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். அதில் பலராலும் மறக்க முடியாத படங்களில் ஒன்று 'பொல்லாதவன்'. அதாவது வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ்-ரம்யா ஜோடியாக நடித்த இப்படமானது 2007-ஆம் ஆண்டு வெளியாகி பெரியளவில் வெற்றியைப் பெற்று இருந்தது. 


இப்படத்தினைத் தொடர்ந்து பின்னர் மீண்டும் தனுஷ், வெற்றி மாறன் கூட்டணியில் வந்த 'ஆடுகளம், வடசென்னை, அசுரன்' ஆகிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன. இவற்றில் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்கு தனுசுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. 


இந்தநிலையில் பொல்லாதவன் படமானது திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதை சென்னையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். இதில் தனுஷ், ரம்யா, வெற்றி மாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். 


இதனைத் தொடர்ந்து நடிகை ரம்யா இது தொடர்பாக குறிப்பிடுகையில் ''பொல்லாதவன் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனுசுக்கு மிக்க நன்றி. அவர்தான் இந்த படத்தில் நடிக்க என்னை பரிந்துரை செய்தார். அதுமட்டுமல்லாது வெற்றிமாறனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அத்தோடு ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை சிறப்பாக இருந்தது" எனக் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாது "மீண்டும் தனுஷை பொல்லாதவனாக பார்க்க ஆசைப்படுகின்றேன், பொல்லாதவன் 2-ம் பாகம் படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement