• Jan 27 2023

எவ்ளோ பெரிய கொட்டாவி பூமர் அங்கிள்.. விக்ரமனை பங்கமாக கலாய்த்த அசீம் ஆர்மி- வைரலாகும் வீடியோ

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் மட்டுமல்லாது டிஸ்னி பிளஸ் ஹொஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியானது 10 வாரங்களைக் கடந்து சூப்பர் ப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் விக்ரமன் கமல்ஹாசனின் ஆஸ்த்தான போட்டியாளராக மாறி உள்ள விக்ரமனை ஷிவின், ஏடிகே மற்றும் அமுதவாணன் உள்ளிட்ட போட்டியாளர்கள் விக்ரமன் விளையாட்டை பாராட்டி வருகின்றனர்.


பிக் பாஸ் வீட்டில் அதிக பாராட்டுக்களை அள்ளி வரும் விக்ரமனுக்கும் அசீமுக்கும் இடையே பெரும் சண்டை வெடித்து வருகிறது. விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என்பதால் தான் இருவருக்கும் செட் ஆகாமல் முட்டிக் கொள்கின்றனர் எனக் கூறப்படுகிறது. வீட்டிற்குள் இவர்கள் இருவரும் சண்டை போடுகிறார்களோ இல்லையோ, வெளியே இவர்களது ரசிகர்கள் கிளவுன் அசீம் என்றும் பூமர் விக்ரமன் என்றும் வெறித்தனமாக சண்டை போட்டு வருகின்றனர்.

அசீம் ஆர்மியினர் விக்ரமன் மீது அடிக்கடி வைக்கும் குற்றச்சாட்டுகளில் மிகவும் முக்கியமான குற்றச்சாட்டு என்றால் அது அவர் ஒரு தூங்குமூஞ்சி என்றும் சோம்பேறி என்பதும் தான். எந்த வேலையும் பெருசா செய்யாமல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு கொட்டாவி விட்டு தூங்கிவிடுவார் என கலாய்த்துள்ளனர்.


சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் படம் பற்றி பேசும் போது கூட நிறைய கொட்டாவி விட்டுக் கொண்டே விக்ரமன் பேசியிருப்பார். இந்நிலையில், இந்த பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததில் இருந்தே அவர் விட்ட மிகப்பெரிய கொட்டாவி இதுதான் என அசிம் ஆர்மியினர் கேப்ஷர் பண்ண வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement