• Mar 28 2023

ஆண்கள் விடுதியிலும் எதிர் நீச்சல் சீரியல் பார்க்கிறோம்- நபர் ஒருவர் போட்ட கமெண்ட்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  தரமான தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ஜனனி, குணசேகரன், சக்தி, கதிர், நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, ஞானசேகரன் எனும் கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான கதையாக அமைந்துள்ளது. ஆணாதிக்கம், பெண் உரிமை ஆகியவற்றை மையக் கருவாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.


அத்தோடு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் நபர் ஒருவர் இந்த சீரியல் குறித்து பதிவிட்ட பதிவொன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது.


எதிர் நீச்சல் சீரியலை சிறுயவர் முதல் பெரியவர் வரை பாராட்டி வரும் நிலையில் இந்த சீரியல் தற்பொழுது இளைஞர்களையும் கவர்ந்துள்ளதாம். இதனால் இந்த சீரியலை ஆண்கள் விடுதியில் தொடர்ந்து பார்ப்பதாக பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement