திடீரென வைரலாகும் பிக்பாஸ் ப்ரியங்காவின் திருமண புகைப்படங்கள்- காரணம் என்ன தெரியுமா?

2149

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கிய தொலைக்காட்சியான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 5 வது சீசன் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுவரை இந்த வீட்டை விட்டு 6 பேர் வெளியேறியுள்ளனர். இறுதியாக இசைவாணி வீட்டை விட்டு வெளியேறினார்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்குபற்றி வருபவர்களில் ஒருவர் தான் ப்ரியங்கா டேஷ்பாண்டே. இவர் விஜய்டிவியின் முக்கிய தொகுப்பாளர் என்பதோடு கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், அச்சம் தவிர் ஜோடி நம்பவர் ஒன் சவுண்ட் பார்ட்டி முரட்டு சிங்கிள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்தவர்.

இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஷீ தமிழின் தி சிற்பி கேர்ள் என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். தற்போது முக்கிய தொகுப்பாளராக இருப்பதோடு சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கின்றார். இதனால் தனது நிகழ்ச்சிகள் மற்றும் தான் வெளியில் செல்லும் புகைப்படங்களை பதிவேற்றி வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில், ப்ரியங்காக கடந்த 2016ம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது திடீரென பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தனது வாழ்வியல் குறித்து பேசிய அவர், தனது அம்மா மற்றும் தம்பியை பற்றி மட்டுமே அதிகம் பேசியிருந்தார்.

மேலும் ப்ரியங்கா தான் தொகுத்து வழக்கும் நிகழ்ச்சிகளில், தன் கணவரைக் கலாய்த்து பலமுறைப் பேசியிருந்தாலும், அவர் குறித்து புகைப்படமோ அல்லது அவர் குறித்து தகவலோ இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான் ரசிகர்கள் ப்ரியங்காவின் திருமண புகைப்படத்தை தேடி எடுத்து வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.