• Sep 27 2023

''எங்க ஜெயிலர் ட்ரெய்லர்ல தமன்னாவ காணோம் '' - காவாலா வைப் மிஸ்ஸிங்..புலம்பும் ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் - நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. சூப்பர் ஸ்டாருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் முதலில் ஜெயிலர் டைட்டில், ரஜினி தீம் மியூசிக், ரஜினியின் கேரக்டர் அறிமுகம் ஆகியவை அடுத்தடுத்து வெளியானது. அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. வழக்கமாக ரஜினியின் இன்ட்ரோ சாங்காக வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, தமன்னாவை களமிறக்கி வைப்ரேஷன் கொடுத்தார் நெல்சன்.

அனிருத் இசையில் 'காவாலா' என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடலில் தமன்னாவின் ஆட்டம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. இந்நிலையில் இப்போது ஜெயிலர் ட்ரெய்லர் செம்ம மாஸ்ஸாக வெளியானது.

ரஜினியின் ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ள இந்த ட்ரெய்லரில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ஜாக்கி ஷெராஃப், சுனில் ஆகியோரை மட்டுமே காட்டியுள்ளார் நெல்சன்.

தமன்னாவை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒரு சீனில் கூட தமன்னாவை காட்டவில்லை என்பதால், காவாலா வைப் இல்லாமல் ஜெயிலர் ட்ரெய்லரை ரசிக்க முடியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement