• Apr 01 2023

மயிரிழையில் உயிர் தப்பிச்சோம்! ஷாக் ஆன “மார்க் ஆண்டனி” சூர்யா

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில், ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் விஷால் நடிப்பில், கடைசியாக வெளியான 'லத்தி' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை தொடர்ந்து 'மார்க் ஆண்டனி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்டுள்ள விபத்து படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


அதாவது லாரி வரும் காட்சி எடுத்துக்கொண்டிருந்த போது, அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, தொழிலாளர்களை நோக்கி வந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அதனை அடுத்து நடிகர் விஷால் கொஞ்சநேரத்தில் கடவுள் எங்களைக் காப்பாற்றி விட்டார் கடவுளுக்கு நன்றி எனத் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து நடிகர் எஸ்.ஜே சூர்யா Just Miss-ல உயிர் தப்பிச்சோம், என்றும் யாருக்கும் எதுவும ஆகல. ரொம்ப சீக்கரமே படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்லோரும் பூரண நலத்துடன் இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement