• Apr 23 2024

காதலை மையமாக கொண்ட 'மாடர்ன் லவ் சென்னை' வெப் தொடர்... மனதை மயக்கியதா..? அல்லது மாற்றியதா...? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

பாரதிராஜாவுடன் இணைந்து 6 வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கிய ஒரு வெப் தொடர் தான் 'மாடர்ன் லவ் சென்னை'. இந்த ஆந்தாலஜி வெப் தொடர் ஆறு அத்தியாயங்களை கொண்டு உருவாகியுள்ளது. இதற்கு ஜிவி பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன், இளையராஜா ஆகிய 4 இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப்தொடரானது மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் படம் பற்றி ட்விட்டரில் கூறியுள்ள விமர்சனங்களை பார்ப்போம்.

அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில் "ராஜுமுருகன் இயக்கியுள்ள லாலா குண்டா பொம்மைகள் ஆவரேஜாக இருப்பதாகவும், கலர்புல்லான மேக்கிங் தவிர அதில் ஒன்றுமில்லை, பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள இமைகள் நன்றாக இருக்கிறது, டிஜே பாணுவின் நடிப்பு சூப்பர், கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ செம்ம மொக்கையாகவும், கிரிஞ்சாகவும் இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.


அதேபோன்று இன்னொருவர் கூறுகையில் "இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மட்டும் தனியாக தெரிந்தது. சில காட்சிகளை அமைதியால் கையாண்டிருப்பது ரொம்பவும் அருமை. சந்தேகமே இல்லை, அவர் மட்டும் தான் என்றென்றும் இசையின் கடவுள்" எனவும் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

 

மேலும் ஒருவர் கூறுகையில் "மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் இளையராஜாவின் இசை பெரும் பாராட்டுக்களை ரசிகர்களிடம் பெற்று வருகிறது. அந்த வகையில், டைம் டிராவல் செய்து மார்கழி தொடரில் இடம்பெறும் தென்றல் மற்றும் நெஞ்சில் ஒரு மின்னல் ஆகிய பாடல்களை இளையராஜா இசையமைத்து உள்ளதாகவும், இந்த இரண்டு முத்தான பாடல்களில் விண்டேஜ் இளையராஜாவை பார்க்க முடிந்தது" எனவும் தெரிவித்திருக்கின்றார்.


இன்னொரு நெட்டிசனின் பதிவைப் பார்த்தால் "தியாகராஜன் குமாரராஜாவின் நினைவோ ஒரு பறவை தொடரில் உள்ள பல்வேறு நுணுக்கங்களை திரும்ப திரும்ப பார்த்தால் தான் புரிந்துகொள்ள முடியும், ராஜா ராஜா தான்யா. இதில் பயன்படுத்தியுள்ள வண்ணங்கள், பிரேம்கள், இசை மற்றும் எழுத்து மூலம் இயக்குநர் ரசிகர்களை மெய்மறக்க செய்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


அத்தோடு "மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் இடம்பெறும் ‘இமைகள்’ என்கிற அத்தியாயத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ளார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பின் மீண்டும் இயக்குனராக களமிறங்கி உள்ள அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்" என மற்றொரு நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் "மாடர்ன் லவ் சென்னை வெப் தொடருக்காக இளையராஜா இசையமைத்துள்ள அனைத்து பாடல்களும் புதிதாக இருக்கிறது. இதுபோன்ற பாடல்களை அவர் இதுவரை கொடுத்ததில்லை என நினைக்கிறேன். உனக்கு திமிர் இருக்கலாம் தல, உனக்கு இல்லேனா வேற யாருக்கு இருக்க முடியும்" மேலும் ஒருவர் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாது பாரதிராஜா பறவைக்கூட்டில் வாழும் மனிதர்கள் என்கிற அத்தியாயத்தை இயக்கி இருக்கிறார். இதற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். இந்த குறும்படத்தை மறைந்த தனது நண்பனும், இயக்குநருமான பாலுமகேந்திராவுக்கு சமர்பிப்பதாக அதன் டைட்டில் கார்டில் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக 'மாடர்ன் லவ் சென்னை' ஆந்தாலஜி வெப் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை அதிகம் பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement