• Apr 19 2024

புத்தாண்டு சர்ப்ரைஸாக வெளியாகவுள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லர்-அடடே எப்போது ரிலீஸ் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. 


இந்நிலையில்,'வாரிசு' திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் வாரிசு இசை வெளியீட்டு கடந்த 24ம் திகதி பிரமாண்டமாக சென்னையிலுள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.கிட்டத்தட்ட 5000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் விழாவைக் கண்டு களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement