• Mar 29 2024

வாரிசு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- டிசம்பரில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், சங்கீதா, குஷ்பூ, சம்யுக்தா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை, மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளதோடு இயக்குநர் வம்சி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திலிருந்து  வெளியான ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் பட்டையை கிளப்பிய நிலையில், விரைவில் இரண்டாவது சிங்கள் பாடலும் வெளியாகும் என கூறப்படுகிறது.


முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து ஆக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் மாதம் 24ம் திகதி வெளியாகலாம் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது. வழக்கம் போல் தளபதியின் ரசிகர்கள் வைரலாக்க தொடங்கி உள்ளனர். அதேபோல் 'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச்சில், இந்த முறை விஜய் என்ன பேசப் போகிறார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படாத நிலையில், விரைவில் இது குறித்த தகவல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement