• Apr 19 2024

வாரிசு திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் இத்தனை கோடி வசூலிக்குமா?- வெளியாகிய கணிப்பு விபரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். விஜய்யின் தீவிர ரசிகையான இவர் இப்படத்தில் நடித்ததால் ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர்.இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், குஷ்பு என பலரும் நடித்திருக்கின்றனர்.


 இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.விஜய்க்கு அவர் இசையமைக்கும் முதல் படம் என்பதால் நிறைய உழைப்பை போட்டுள்ளார், அதனை இசை வெளியீட்டு விழாவில் கூட கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் விஜய்யின் வாரிசு படத்திற்கு துணிவை விட குறைவான திரையரங்குகள் கிடைத்திருக்கிறது .ஆனால் வெளிநாடுகளில் வாரிசு அதிக புக்கிங் ஆகி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.தற்போது வாரிசு படத்திற்கான சில விவரங்களை வைத்து படத்தின் முதல் நாள் வசூல் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் நாளில் படம் ரூ. 25 கோடிக்கு வசூலிக்கும் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement