• Apr 25 2024

வி.ஜே. மகேஸ்வரி பற்றி ரொம்ப சரியாச் சொன்ன தனலட்சுமி-அப்பிடி என்ன தான் கூறினார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

எதற்கெடுத்தாலும் கண்ணீர் விடும் வி.ஜே. மகேஸ்வரி பற்றி தனலட்சுமி சொன்னது தான் மிகவும் சரி என்று பிக் பாஸ் பார்வையாளர்கள்  கூறுகின்றனர்.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் வி.ஜே. மகேஸ்வரி எதற்கெடுத்தாலும் அழுவது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வாழ்க்கையில் போராடும் மகேஸ்வரி இந்த பிக் பாஸ் கேமை புரிந்து கொள்ளாமல் அழுவது தான் ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்கள் பார்வையாளர்கள்.

அத்தோடு  அனைத்து விஷயங்களிலும் மகேஸ்வரி தலையிடுவதும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. மகேஸ்வரி வெளியேறுவாரென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாந்தி அக்காவை வெளியேற்றிவிட்டார் பிக் பாஸ்.

இவ்வாறுஇருக்கையில் அந்த அக்காவுக்கு பதில் இந்த அக்கா(மகேஸ்வரி) போயிருக்கலாம் என்று கூறினார் தனலட்சுமி. அதை பார்த்த பார்வையாளர்களோ, தனலட்சுமி சொன்னது தான் சரி.

சாந்தி அக்காவுக்கு பதில் மகேஸ்வரியை முதலில் அனுப்பி வைத்திருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதற்கிடையே தனக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என்கிறாராம் மகேஸ்வரி.

என்னை தயவு செய்து என் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். ஜி.பி. முத்து போன்று நானும் போகிறேன் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மகேஸ்வரி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு பிக் பாஸ் பார்வையாளர்கள் எல்லாம் அசீமை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அசீமுக்கு ஆதரவு தெரிவித்து பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார் மகேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement