• Apr 20 2024

குட் நியூஸ் சொன்ன வி.ஜே அர்ச்சனா- ரசிகர்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2


திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தமது லட்சியத்தை அடைய எவ்வாறு எல்லாம் போராடுகின்றார்கள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.இதனால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


இந்த சீரியலில் முதலில் நெக்கட்டிவ் ரோலில் நடித்தவர் தான் விஜே அர்ச்சனா. இவர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கம் போதே திடீரென இதிலிருந்து விலகினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் விலகினார் என்று கூறப்பட்டது. ஆனால் ஏன் விலகினார் என்று இது வரை சரியான தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் இவர் இன்ஞ்சினியரிங் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement